புகைப்படங்களை விற்பனை செய்யக்கூடிய இணையத்தளங்கள்

உங்கள் புகைப்படங்களை விற்பனை செய்யக்கூடிய இணையத்தளங்கள்

உங்களிடம் பெருந்தொகையான தரமான புகைப்படங்கள் உள்ளதா அவற்றினை பணமாக்குவற்கு பல இணையத்தளங்கள் இப்பொழுது காணப்படுகின்றன அவ்வாறான சில இணையத்தளங்களையே இந்த பதிவில் பேச இருக்கிறோம்

1.Alamy

Profitable Places to Sell Your Photos Online
இந்த இணையத்தளத்தில் 60மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காணப்படுகின்றன அதற்கு காரணம் விற்பனை செய்யப்பட்ட தொகையில் இருந்து 50 வீதமான பணத்தினை உரிமையாளருக்கு வழங்குகின்றது. மேலும் இவ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் வேறு இணையத்தளங்களிலும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உங்களுடைய கணக்கு மீதி 50$ இனை அடைந்ததும் தானாகவே உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்
உங்கள் பணத்தினை 3 வழிகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
1.வங்கி கணக்கினூடாக
2.Paypal ஊடாக
3.Skirill ஊடாக

Sign up

2.Shutterstock

Profitable Places to Sell Your Photos Online
இந்த இணையத்தளம் இதுவரை 350மில்லியன் டொலர் பணத்தினை தன்னுடைய பங்களிப்பாளர்களுக்கு வழங்கி உள்ளது. இவ் இணையத்தில் விற்பனை செய்யப்படும் புகைப்படங்கள் வேறு இணையத்தளங்களில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. விற்பனை செய்யப்படும் தொகையில் 30% உங்களுக்கு வழங்கப்படும்.
உங்களுடைய கணக்கு மீதி 35$ இனை அடைந்ததும் தானாகவே உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்
உங்கள் பணத்தினை 4 வழிகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
1.காசோலை ஊடாக
2.Paypal ஊடாக
3.Skirill ஊடாக
4.Payoneer ஊடாக

Create Shutterstock contributor account

3.123rf

Profitable Places to Sell Your Photos Online
இந்த இணையத்தளத்தில் 45மில்லியனுக்கும் அதிகளவான புகைப்படங்கள் உள்ளன தோராயமாக ஒவ்வொரு வாரமும் 5 லட்சம் புதிய புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. விற்பனை செய்யப்படும் பணத்தில் 30 தொடக்கம் 60 வீதமான பணம் விற்பனை செய்பவருக்கு வழங்கப்படும். அது அவர்களால் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களின் அளவினைப் பொறுத்து மாறுபடும்.
உங்கள் பணத்தினை 3 வழிகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
1.Paypal ஆகக்குறைந்த பணப்பரிமாற்றம் 50$
2.ஸ்கிரில் ஆகக்குறைந்த பணப்பரிமாற்றம் 100$
3.Payoneer ஆகக்குறைந்த பணப்பரிமாற்றம் 50$

sell images from 123rf

இதன் மூலம் வருமானத்தினை அதிகரிக்க விரும்பினால் அதிக புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் அதனை அடையலாம்