பொலநறுவைக்காலத்தில் இந்து மதம்

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம் காலப்பின்னணி கி.பி.10 – 13 வரையான காலமாகும். கி.பி. 985 – 1255 வரையான கலிங்க மாகோன் காலமாகும். இதில் கி.பி.985 – 1070 வரை சோழர் இலங்கையில் பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர் இவர்கள் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த சோழர் கட்டிட சிற்ப கலைஞர்கள், பிராமணர், வணிகர், கம்மாளர், போர்வீரர்கள் என பலரையும் குடியேற்றினர். இதனால் இந்து கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டும் பாடல் பெற்ற தலங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டும் திராவிட … Read more

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் [ கி.மு 2000 – கி.மு 600 ] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் இந்து மதம். இலங்கையில் ஆதிக் குடிகள் சிங்களவர் என்றும் இலங்கை வாழ் தமிழர் வந்தேறு குடிகள் என்றும் மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட திரிவுக் கருத்து நீண்ட காலமாய் நிலவி வந்தது. ஆனால் தொல்லியல் ஆய்வுகள் கி.மு. 2000ம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பெருங்கற் பண்பாடு நிலவியமை தெரியவந்துள்ளது. இப் பண்பாட்டிற்குரியோர் திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழர் என்பது … Read more

இலங்கையில் இந்து நாகரிகம்

இலங்கையில் இந்து நாகரிகம் இலங்கை பாரத நாட்டுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளதால் இங்குள்ள மக்கள் பாரத நாட்டிலிருந்து வந்து குடியேறியமையாலும், அங்குள்ள மக்களுடன் சமூக கலாச்சார, சமய, வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தமையாலும் பாரத நாட்டின் சமய, கலாச்சார பரவல் ஈழத்தின் பண்டு தொட்டே நிகழ்ந்து வந்துள்ளமை இயல்பேயாகும். அந்த வகையில் இந்திய நாட்டின் இந்து நாகரிகச் செல்வாக்கும், இந்து சமயத்தின் தாக்கமும் இலங்கையில் தொன்று தொட்டே நிலவி வருகின்றது. வரலாற்றுக்கு முன்பிருந்தே இந்து சமயம் இலங்கையிலே பரவி … Read more

வேதம்

வேதம் வேதங்கள் பண்டைய இந்து மதம் பற்றிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு கிடைக்கின்ற இலக்கிய ஆதாரங்கள் வேதங்களாகும். வேதம் என்பது “வித்’’ என்ற அடியில் இருந்து பிறந்தது. வித் என்றால் அறிவு எனப் பொருள்படும். எனவே வேதம் என்பது அறிவு நூல் அல்லது ஞானநூல் எனப் பொருள்படும். வேதங்கள் என்னும் போது இருக்கு வேதம், யசுர் வேதம், சாமம் வேதம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையுமே குறிப்பதாய் உள்ளது. இவ்வாறு வேதங்களை நான்காக வகுத்தவர் வியாச … Read more

அறுவகைச் சமயம்

அறுவகைச் சமயம் ஆறு + சமயம் = அறுவகைச் சமயம். இந்தியாவில் தோற்றம் பெற்ற மதங்களுள் வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதீக சமயங்கள் அறுவகைச் சமயங்கள் அல்லது சண்மதங்கள் எனப்படும் அவை காணாபத்தியம் சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் சங்கரரது காலத்தில் இம் மதங்களிடையே போட்டி பொறாமைகள் இருந்தன இவற்றை சீர் செய்து ஒவ்வொரு மதத்திற்குமான ஆகமங்கள் பிராமண நூல்கள் என்பவற்றை வகுத்து இம் மதங்களின் முழுமுதற் கடவுள்களிடையே உறவு முறைகளை நிலை நாட்டி சண்மதங்களை மீள் … Read more