விமர்சன சிந்தனை அறிமுகம்

விமர்சன சிந்தனை அறிமுகம்

1.1 விமர்சன சிந்தனை என்றால் என்ன

அறிதல், உணர்தல், விரும்பிச் செய்தல் ஆகிய மூன்றும் அறிவின் கூறுகள் ஆகும். அறிவார்ந்த சிந்தனை, அறிவார்ந்த சொல்; அறிவார்ந்த செயல் இந்த மூன்றையும் உள்ளடக்கியவனே மனிதன். எனவே தான் ‘மனிதன் ஓர் அறிவு ஜீவி’ என்றார்; அரிஸ்டாட்டில். சிந்தனையின் வெளிப்பாடே பகுத்தறிவு. பகுத்தறிவு சிந்தனை சிறப்பு அம்சமாகும். விமர்சன சிந்தனை (விமர்சன பகுப்பாய்வு) எனவும் அழைக்கப்படுகிறது. தெளிவாகவும் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பதற்கான திறனே விமர்சன சிந்தனை எனப்படும். இது ஆழ்ந்த சிந்தனையையும் சுதந்திரமான சிந்தனையையும் உள்ளடக்குகின்றது.

விமர்சன சிந்தனையானது திறமைகளை உள்ளடக்கிய பகுப்பாய்வு வாதங்களாகும்;. அனுமானங்களை மேற்கொள்ளல், தொகுத்தறியக்கூடிய அல்லது உய்தறியகூடிய காரணங்களை கண்டறிதல், நியாயித்தல் அல்லது மதிப்பிடல் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்ளல் அல்லது பிரச்சினைகளைத் தீர்த்தல் என்பவற்றை இது உள்ளடக்கி உள்ளது.

விமர்சன சிந்தனையானது அறிவு திறன்கள் மற்றும் ஒருவரின் இயற்கைப் பண்புகளுடன் இணைந்ததாகும். ஒருவரின் இயற்கைப் பண்புகளான ஒருவரது உளப்பாங்குஇ பாரபட்சமற்ற தன்மைஇ நெகிழ்வு போக்கு என்பன இயற்கையாகவே கண்டறியக் கூடிய குணங்களாக உள்ளன. இது பற்றிய அதிக தகவல்களை பலவிதமான பார்வைக் கோணங்களில் அறிந்து கொள்ளலாம். பொதுவானதாகவும் அதேவேளை உறுதியான பார்வை கொண்டதாகவும் விமர்சன சிந்தனை காணப்படுகின்றது. மனிதர்களுக்கு விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறமை மிக இள வயதிலேயே உண்டு என அனுபவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வளர்ந்தோரிடம் விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறமை மிக குறைவாகவே காணப்படும் என்று கூறுவதும் ஐயத்துக்குரியதாகும்.

அரசியல், சமூக, விஞ்ஞான விடயங்களில் ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? போன்ற கேள்விகளுக்கு விடைதேடி முடிவுகளை எடுக்க உதவும் ஒரு விஞ்ஞான பூர்வமான முறையாக விமர்சன சிந்தனை உள்ளது. விமர்சன சிந்தனை ஆற்றல் உடையோரால் பின்வருவனவற்றை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

 1. கருத்துக்களுக்கிடையிலான தர்க்கத் தொடர்புகளை அறிந்து கொள்ள முடியும்.
 2. வாதங்களின் கட்டமைப்பினையும் மதிப்பீட்டையும் அடையாளம் காண முடியும்.
 3. விளக்கங்களில் உள்ள முரண்பாடுகளையும் பொதுவான தவறுகளையும் கூர்ந்து கண்டறிய முடியும்.
 4. ஒருவரது சொந்த நம்பிக்கைகள் பெறுமானங்கள் பற்றிய நியாயப்படுத்தல்களை ஆழ்ந்து சிந்திக்க முடியும்.
 5. முடிவுகளையும் அதற்கான காரணங்களையும் அடையாளம் காண உதவும்
 6. எடுகோள்களையும், விவாத பலவீனங்களையும் அடையாளம் காண உதவும்.
 7. ஆதாரங்களின் வலுவை ஆராய உதவும்.
 8. விவாதத்தின் பலம் பலவீனம் வடிவமைப்பு பற்றி அறிய உதவும்.

விமர்சன சிந்தனை ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தொகுதியான தகவல்களை கருத்தில் கொள்வதில்லை. ஒரு மனிதனுடைய சிறந்த ஞாபக ஆற்றல், அதிக உண்மைகளை அறிந்திருத்தல் போன்றன கூட சிறந்த விமர்சன சிந்தனைக்கு அவசியமில்லை.
ஒரு விமர்சன சிந்தனையாளரினால் தான் தெரிந்து கொண்டுள்ள விடயங்களின் காரணங்களை ஊகித்து அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தகவல்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனையும் அறிந்து இருப்பார்.

விமர்சன சிந்தனையானது வாதங்கள் தொடர்பானது. ஆனால் இதனை மற்ற மனிதர்கள் தொடர்பான குறை சொல்வது அல்லது விமர்சனம் என்ற வகையில் குழப்பிக் கொள்ளக் கூடாது. விமர்சன சிந்தனைத் திறனானது தவறான வாதங்களையும், தவறான காரணங்களையும் கண்டறிவதற்கான வாய்ப்பை வழங்குவதற்குப் பயன்படுத்தப் படுத்தப்படுகின்றது.
அறிவினைத் தேடிப் பெற்றுக் கொள்ளவும், கொள்கைகளை விருத்தி செய்யவும், பலமான வாதங்களை கட்டியெழுப்பவும் விமர்சன சிந்தனை எமக்கு உதவுகின்றது. விமர்சன சிந்தனையை பயன்படுத்துவதன் மூலம் வேலையின் செயற்பாட்டு நோக்கினை உயர்த்துவதுடன் சமூக நிறுவனங்களை விருத்தி செய்யவும் முடியும்.

ஒரு சிலர் விமர்சன சிந்தனையானது படைப்பாற்றலைத் தடுக்கின்றது என நம்புகின்றனர். ஏனெனில் இது தர்க்கத்தினதும் பகுத்தறிவினதும் விதிமுறைகளையும் இன்றியமையாத ஒன்றாக வேண்டி நிற்கின்றது. ஆனால் படைப்பாற்றலுக்கு விதிமுறைகளை மீறும் தேவையும் ஏற்படும். இது ஒரு தவறான கருத்து ஆகும். விமர்சன சிந்தனை படைப்பாற்றலுக்கு ஒரு முக்கிய பகுதியாகும். ஏனெனில் எமது ஆக்கபூர்வமான சிந்தனைகளை விருத்தி செய்யவும் மதிப்பிடவும் விமர்சன சிந்தனை எமக்கு தேவைப்படுகின்றது.

வாட்சன் கிளஸ்டர் (Watson Claster) : விமர்சன சிந்தனைத் திறன் தொடர்பாக நன்கு அறியப்பட்ட உளவியல் சோதனையின் மூலம் விமர்சன சிந்தனையை மதிப்பிட்டார். இச் சோதனை ஆசிரியர்கள் விமர்சன சிந்தனை தொடர்பாக பின்வரும் வரைவிலக்கணங்களை முன்வைக்கின்றனர்.

மனப்பான்மையில் கலந்த அறிவு மற்றும் திறன் தான் விமர்சன சிந்தனை ஆகும். இக் கலப்பு பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.

 1. விசாரணை மனப்பான்மை அதாவது அது பிரச்சினையின் இருப்பை அடையாளம் கண்டு கொள்வதனையும் உண்மையை வலியுறுத்துவதற்கு ஆதரவாக தேவைப்படுகின்ற ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதனையும் உள்ளடக்குகின்றது.
 2.  செல்லுபடியாகும் அனுமானங்கள் கருத்துப் பொருட்களைக் கொண்டதாகவும், பொதுமைப்படுத்தப் பட்டதாகவும் அறிவின் இயல்பு உள்ளது. இவற்றின் துல்லியத் தன்மையும், எடையும் பல்வேறுபட்ட ஆதாரங்கள் மூலம் தர்க்கரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 3. மேலே குறிப்பிடப்பட்ட மனப்பான்மையையும் அறிவையும் நடைமுறைப்படுத்தும் அல்லது செயற்படுத்தும் திறன்.
  பின்வரும் பகுதி பீட்டர் ஏ. பாஸியன் (Peter A.Facione-1990) இடம் இருந்து வந்தது
  “விமர்சன சிந்தனை: கல்வி மதிப்பிடு மற்றும் அறிவூட்டல் நோக்கங்களுக்காக நிபுணர்களின் ஒருமித்த அறிக்கை” இது அமெரிக்க மெய்யியல் சங்கத்தின் ஒரு அறிக்கை.
  “எம்மால் விமர்சன சிந்தனையின் நோக்கங்களை அறிந்து கொள்ள முடியும். அவை, சுய கட்டுப்பாடு விசாரணை, பகுப்பாய்வு, மதிப்பீடு, அனுமானம், அதே போன்று சான்றுக்கான விளக்கம், பொது கருத்துக்கள் சார்ந்த, செயன்முறை சார்ந்த, சூழ் நிலை சார்ந்த கருத்துக்கள் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டது.விமர்சன சிந்தனை விசாரணையை ஒரு கருவியாகக் கொண்டது. விமர்சன சிந்தனை கல்வியில் சுதந்திர படையாகவும், ஒரு மனிதனின் மற்றும் குடி வாழ்வில் சக்தி வாய்ந்த வளமாகவும் காணப்படுகிறது. விமர்சன சிந்தனை சாதாரண சிந்தனையை ஒத்ததல்ல. இது ஊடுருவிப் பரவும் ஆற்றலுடையதும், மனித நிகழ்வுகளை சுயமாக சரியாக்கக் கூடியதுமாகும்.ஒரு நிறைவான விமர்சன சிந்தனையாளர் இயற்கையாகவே எதையும் அறியும் ஆர்வ முடையவராகவும், தகவல்களை நன்கறிந்தவராகவும், நம்பத்தகுந்த காரணங்களைக் கொண்டவராவும், திறந்த மனமுடையவராகவும், நெகிழ்வுத் தன்மை யுடையவராகவும், மதிப்பீட்டில் ஒழுங்கான மனமுடைய வராகவும், தனிப்பட்ட பாகுபாடுகளை எதிர்நோக்கும் போது நேர்மையானவராகவும், தீர்ப்புக்களை அல்லது தீர்மானங்களை மேற்கொள்ளும் போது ஜாக்கிரதையாக செயற்படுபவராகவும், மறுபரிசீலனைக்கு தயாரான

  வராகவும், பிரச்சினைகள் பற்றி தெளிவுடையவராகவும், சிக்கலான விடயங்களை ஒழுங்கு முறைப்படி கையாள்பவராகவும், விடயம் தொடர்பான தகவல்களை தேடுவதில் ஊக்கமுள்ளவராகவும், விசாரணையில் கவனம் செலுத்தக் கூடியவராகவும் காணப்படுவார்.

  இவ்வாறான இயல்புகளுடன் செயற்படுபவரே நிறைவான விமர்சன சிந்தனையாளராக காணப்படுவார்.
  சிறந்த விமர்சன சிந்தனைக்கான தேசிய மன்றம், அமெரிக்காவின் விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கும் அமைப்பு போன்றவற்றால் இறுதிப் பகுதி அறிக்கை மைக்கேல் ஸ்கிரிவன் (Micheal Scriven) மற்றும் ரிச்சர்ட் பால் (Richard Paul) போன்றோரல் எழுதப்பட்டது. விமர்சன சிந்தனை அறிவார்ந்த கட்டுப்பாட்டுச் செயன்முறையாக செயற்பாடுடையதாகவும், திறனுடையதாகவும் கருதப்படுகிறது. பிரயோகித்தல், பகுப்பாய்வு செய்தல், தகவல்களைத் தொகுத்து மதிப்பீடு செய்தல், அவதானிப்பு, அனுபவம், பிரதிபலித்தல், தர்க்க அறிவு, தெடர்பாடல், நம்பிக்கை மற்றும் நடவடிக்கைகள் விமர்சன சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது.

  விமர்சன சிந்தனை பொதுமைப்படுத்தப்பட்ட அறிவார்ந்த பெறுமானங்கனை மையமாகக் கொண்டது. இதனை விடவும் தெளிவு, துல்லியம், திருத்தமுடையமை, உடன்பாடு, இயைபு அல்லது பொருத்தம், ஆதாரங்கள், சிறந்த காரணங்கள், கருத்தாளம், பரபரப்பு, செம்மை, போன்றவற்றையும் மையமாகக் கொண்டது.

  விமர்சன சிந்தனையை மேற்கொள்ளும் போது பின்வரும் விடயங்களும் இன்றியமைமயாததாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். நோக்கம், பிரச்சினை, எடுகோள், பொதுக்கருத்து, தெரிந்து கொள்ளப்பட்ட விடய அறிவு, தீர்மானத்திற்கான காரணம், விரைவு, குறிப்புச் சட்டகம் போன்றவையாகும்.

விமர்சன சிந்தனையை எவ்வாறு மேம்படுத்தலாம்

விமர்சன சிந்தனை ஒரு அதீத சிந்தனை ஆற்றல். இது நல்ல கொள்கைகளை எமது வாழ்வில் செயற்படுத்த உதவும். இத்திறனை உடனடியாக ஏற்படுத்துவது மிகவும் கடினமானது. இதற்கு நீண்ட கால தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படும். விமர்சன சிந்தனைத் திறனில் தேர்ச்சி பெறுவதும் ஏனைய சிந்தனைத் திறன்களில் தேர்ச்சி பெறுவதைப் போன்றதே. இத்திறனை விருத்தி செய்ய மூன்று முக்கிய ஆக்கக் கூறுகள் காணப்படுகின்றன.

 1. கொள்கை (Theory)
 2. பிரயோகம் (Practice)
 3. மனப்பான்மை (Attitude)

1.கொள்கை: நாம் சரியாகச் சிந்திக்க வேண்டுமானால் சரியான காரண விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கோட்பாடு பற்றிய அறிவு இந்த விதிகள் பற்றிய அறிவினை உள்ளடக்கியது. விமர்சன சிந்தனையின் சில அடிப்படை விதிகளாக அளவையியல் விதிகள் மற்றும் விஞ்ஞான விதிமுறைகளும் காணப்படுகிறது.
இது மக்கள் செய்யும் சில தவறுகள் பற்றிய அடிப்படை அறிவை எமக்கு வழங்குகிறது. முதலாவதாக இது சில குறிப்பிடத்தக்க தவறுகள் பற்றிய அறிவிற்கு அவசியமானது. இரண்டாவதாக உளவியலாளர்களால் தொடர்ந்து நடைபெறுகின்ற தவறுகளும் மனித காரணங்களின் வரையறையும் கண்டுபிடிக்க உதவுகிறது.

2.பிரயோகம்: எவ்வாறாயினும் இவ்விதிகளை அறிந்து கொள்வதால் மாத்திரம் நல்லவற்றையும், தீயவற்றையும் வேறுபடுத்த போதுமானதாக இல்லை என்பதை நாம் அறிய வேண்டும்;. உதாரணமாக: நாம் வகுப்பறையில் ‘எவ்வாறு நீந்துவது’ என்பதனை கற்றுக் கொள்கிறோம். நீந்துவதற்கான அடிப்படை விதிகளையும் கற்கின்றோம். அதாவது நிரின் அடியில் சுவாசிக்க முடியாது என்ற உண்மையினையும் அறிகின்றோம். ஆனால் இவ் கொள்கை ரீதியான அறிவை நடைமுறையில் பிரயோகிக்க முயற்சிக்கும் போது சில சமயம்; நீந்த முடியாமல் உள்ளது.

சிறந்த விமர்சன திறன்களிற்கு விதிகள் மிக அவசியமாக உள்ளன. ஆகவே இவற்றை எமது அன்றாட வாழ்வில் பிரயோகிக்க வேண்டியுள்ளது. இதனை எமது வாழ்வில் பிரயோகிக்க குறைந்தது இரண்டு வழிகள் உண்டு. ஒன்று சிறந்த தரமான பயிற்சிகளை மேற்கொள்ள கொள்ள வேண்டும். இப் பயிற்சி வகுப்பறையில் மேற்கொள்வதன்று. இது அன்றாட வாழ்க்கையில் ஏனைய மக்களுடனான கலந்;துரையாடல்களும் விவாதங்களுமாக இருக்க வேண்டும்.மற்றைய இரண்டாவது முறை நாம் பெற்றுக் கொண்ட விதிகள் பற்றி ஆழமாயும், அதிகமாயும் சிந்தித்தல். மனித மனமானது ஞாபகத்தாலும் புரிந்து கொள்ளலாலும் எண்ணங்களுக்கிடையிலான தெடாடர்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

படைப்பாற்றல் திறன் அல்லது ஆக்கச் சிந்தனை

வாழ்க்கையில் அன்றாடம் எதிர் கொள்ளும் நிகழ்ச்சிகள், சூழல்கள், சவால்களை நம்முடைய நேரடிப் அனுபவ அறிவின் வாயிலாக மட்டுமே கையாளாமல், அவற்றையும் தாண்டிய சிந்தனையோடு கையாள உதவும் திறனயே படைப்பாற்றல் திறன் என்கிறோம். தாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதற்க்குப் படைப்பாற்றல் திறன் தேவைப்படுகிறது

படைப்பாற்றல் திறன் அல்லது ஆக்கதிறன் என்பது புதிய கருத்துக்களை, கருத்துருக்களை, அல்லது பொருட்களை ஆக்க கூடிய சிந்தனையையும் அதைச் செயற்படுத்த வல்ல ஆற்றலையும் குறிக்கிறது. படைப்பாற்றலை ஏதுவாக்குவதில் சமூக சூழமைவுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. படைப்பாற்றல் பற்றி பல துறை கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு தெளிவான அறிவியல் வரையறை இன்னும் இல்லை.

சமயோசித சிந்தனை (Lateral thinking)

சமயோசித சிந்தனை என்பது பிரச்சினையை மறைமுக மற்றும் படைப்பு அணுகுமுறை பயன்படுத்தி, மரபு வழி படி நிலைகள் அல்லாமல் தீர்வு காணும் முறையாகும். ஒரு சிக்கலையோ புதிரையோ நேரடியாக அணுகாமல், வேறு வழிகளில் யோசனை செய்து தீர்ப்பதற்கு சமயோசித சிந்தனை உதவுகின்கிறது. பிரச்சினையைப் பற்றி சிந்திப்பதற்கு இருப்பது ஒருவழி மட்டுமல்ல. எத்தனையோ வழிகள் உள்ளன. அவைகள் எல்லாவற்றையும் அலசிப் பார்ப்பதுதான் சமயோசித சிந்தனை. சம்பிரதாய சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட முடியும்.

எட்டுவர்ட் டீ போனோ (Edward de Bono-1933) என்பவர் லேட்டரல் திங்க்கிங் சொல்லாக்கத்தையும் கருத்தாக்கத்தையும் முதல்முதலில் தந்தார். புதிய கோணத்தில் சிந்தித்தல், ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தல், அவற்றின் அடிப்படையில் திறமைகளை வளர்த்தெடுத்தல் போன்றவற்றைப் போதிப்பதில் வல்லுநராகத் திகழ்கிறார். ‘சமயோசித சிந்தனை பற்றிய எண்ணக்கரு;’ என்ற புத்தகத்தை எழுதிய எட்டுவர்ட் டீ போனோ கூறுகையில், ‘உங்களுடைய அறிவுத்திறனானது இன்ஜினின் ஆற்றல் போன்றது. இன்ஜினின் ஆற்றலை அதிகரித்தால் நம்முடைய இலக்கை விரைவில் சென்றடையலாம். ஆனால் வாகனத்தை துல்லியமாகவும் செலுத்த தெரிந்தவரால் மட்டுமே வேகமாகவும், பாதுகாப் பாகவும் செல்ல முடியும். இல்லையேல் விபத்து நேரிடும். அது போல் பல வகையான திறமைகள், செயல்திறன் என அனைத்தும் பெற்றிருந்தாலும் நுண்ணறிவு தான் உங்களை மென்மேலும் உயர்த்தும்’ என்று கூறியுள்ளார்.

இணையான சிந்தனை, (Parallel Thinking)

இணை சிந்தனை என்பது எட்வர்ட் டி பொனோவால் உருவாக்கப்பட்ட ஒரு சொல். இது ஆக்கபூர்வமானதுமான மாற்றீடுடாக விவரிக்கப்படுகிறது. “எதிர்மறையான சிந்தனை”; மற்றும் விவாதம் போன்றவற்றில் சாக்ரடீஸ், பிளோட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட அணுகுமுறைகளை எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக, இணையான சிந்தனை நன்கு அறியப்பட்ட சமயோசித சிந்தனை செயல்களின் மேம்பட்ட வளர்ச்சி ஆகும், ஆராய்ச்சிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்துவது என்ன என்பதைக் காட்டிலும் என்ன இருக்க முடியும் என்பதைக் கண்டறியும்.
இணை சிந்தனை என்பது குறிப்பிட்ட திசைகளாக பிரிக்கப்படும் ஒரு சிந்தனை செயல்முறையாக வரையறுக்கப்படுகிறது. ஒரு ஒரு குழுவில் செய்யப்படும் போது அது எதிர்மறையான அணுகுமுறை விளைவுகளைத் தவிர்க்கிறது (நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறது).
எதிர்ப்பான விவாதத்தில், கட்சிகள் (பொதுவாக இரண்டு) முன்வைத்த அறிக்கையை நிஷரூபிக்க அல்லது நிராகரிக்க வேண்டும். இது இக்கவியல்; அணுகுமுறையாகவும் அறியப்படுகிறது. இணை சிந்தனையில் பயிற்சியாளர்கள் பல (முன்னுரிமைக்கு மேற்பட்ட இரண்டு) இணையான பிரிவுகளில் முடிந்தவரை பல அறிக்கைகளை முன்வைத்துள்ளனர்.எல்லா பங்கேற்பாளர்களும் இணையாக இருந்தால், அறிவு, உண்மைகள், உணர்வுகள், முதலியன ஒரு விடயத்தை ஆராய்வதற்கு பங்களிக்க வழிவகுக்கிறது.

பகுப்பாய்வுச் சிந்தனை, (Analytical Thinking)

பகுப்பாய்வுச் சிந்தனை என்பது காட்சி; சிந்தனைக்கு முக்கியமான ஒரு கூறு ஆகும், அது விரைவாகவும் திறமையுடனும் பிரச்சினைகளை தீர்க்கும் திறனை அளிக்கிறது. அது சிந்தனை ஒரு முறைப்படியான படி படிப்படியாக அணுகுமுறையில் ஈடுபடுத்துகிறது. ஒற்றை மற்றும் சமாளிக்கக்கூடிய கூறுகளுக்கு. பிரச்சினைகளை உடைக்க உங்களை அனுமதிக்கிறது. பகுப்பாய்வுச் சிந்தனை தொடர்புடைய தகவலை சேகரித்து இந்த தகவலுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காணும் செயல்முறையை விளக்குகிறது. பல்வேறு வகையான ஆதாரங்களில் இருந்து தரவுகளின் தொகுப்பை ஒப்பிட்டு, சாத்தியமான காரணம் மற்றும் விளைவு வடிவங்களை அடையாளம் காணவும், பொருத்தமான தரவுகளை வழங்குவதற்கு இந்த தரவுதளங்களில் இருந்து பொருத்தமான முடிவுகளை வரையவும் இந்த வகையான சிந்தனை எங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த நுட்பத்தை அரிசுட்டாட்டில் எண்முறையியல் மற்றும் கணிதத்தில் இதைப் பயன்படுத்தியுள்ளமைக்கு சான்றுகள் உள்ளன.

கலாநிதி ஏ.எல்.எம்.றியால்